உத்தமவில்லன் படத்தை தடை செய்ய வேண்டும்: போலீஸ் கமிஷனரிடம் விஷ்வ இந்து பரிஷத் புகார்

கமலஹாசன் நடித்த ‘உத்தமவில்லன்’ படம் வருகிற 17–ந்தேதி ரிலீசாகிறது. இந்த படத்தில் இந்துக் கடவுள்களை விமர்சித்துள்ளதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. படத்தை தடை செய்ய வேண்டும் என சென்னை மாநகர விஷ்வ இந்து பரிஷத் அமைப்பாளர் சத்யமூர்த்தி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

kamal-uththama-villan

அதில் கூறி இருப்பதாவது:–

‘உத்தமவில்லன்’ படத்தில் கடவுளின் பெருமாள் அவதாரங்கள் விமர்சிக்கப்பட்டு உள்ளன. பக்த பிரகலாதன் மற்றும் தந்தை இரணியன் இடையிலான உரையாடலை வில்லுப்பாட்டாக உதிரத்தின் கதை என தொடங்கும் பாடலில் சேர்த்துள்ளனர்.

இதில் பெருமாள் அவதாரத்தை கொச்சைப்படுத்துவதுபோல் வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. இந்து மதத்தை எதிர்க்கும் நாத்திகனாக தன்னை காட்டிக் கொள்ளும் கமல் இந்து கடவுளை விமர்சித்து இருப்பது இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது. எனவே இப்படத்தை தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

Related Posts