உத்தம வில்லன் படத்தில் கமலஹாசன், நிறைய வித்தியாசமான கெட்டப்களில் தோன்றுகிறார்.
சினிமாவை பற்றிய கதையம்சம் உள்ள படமாக இது தயாராகிறது. கமல் நடிகர் கேரக்டரில் வருகிறார். அரசர் வேடம் உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் வருகிறார். இதில் ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
‘உத்தம வில்லன்’ படப்பிடிப்பு முடிந்துள்ளது. டப்பிங், ரிரீகார்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. விரைவில் இப்படம் ரிலீசாக உள்ளது.
ஏற்கனவே ‘விஸ்வரூபம் 2’ படத்தில் கமல் நடித்து முடித்துள்ளார். பாபநாசம் படமும் முடிந்துள்ளது. இது மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடியது. ‘திரிஷ்யம்’ படத்தின் ரீமேக் ஆகும். மூன்று படங்களும் ஒன்றன்பின் ஒன்றாக வர இருக்கின்றன. முதலில் உத்தம வில்லன் படம் வருகிறது.