உதயன் பத்திரிகையின் கிளிநொச்சி அலுவலகம் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

uthayan-vanniகிளிநொச்சியில் உதயன் பத்திரிகை கிளைக்காரியாலயம் மற்றும் பத்திரிகை விநியோகத்தர்கள், விநியோக வாகனம் ஆகியவற்றின் மீது இன்று அதிகாலை ஐந்து மணியளவில் இனந்தெரியாதோரால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் அமைந்திருக்கும் உதயன் பத்திரிகையின் கிளைக் காரியாலயத்திலேயே இவ் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இவ் தாக்குதல் சம்பவத்தில் உதயன் கிளிநொச்சி அலுவலகம் சேதமடைந்திருப்பதுடன் பத்திரிகை விநியோகப் பணிக்காகச் சென்ற இரு பணியாளர்கள் , மற்றும் கிளை முகாமையாளர் உட்பட நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அநுமதிக்கப் பட்டுள்ளார்கள்.இதனையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிசாரும் இராணுவத்தினரும் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related Posts