உதயன் ஆசிரியரைத் தாக்கியவர்களை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணி அரசை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் ந.குமரகுருபரன் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உதயன் ஆசிரியர் மீதான அரச படையினரின் தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. ஒரு பத்திரிகையாளரின் கடமையைத் தடுத்து அவரைத் தாக்கியதற்கு எதிராகப் பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனர்த்த சூழலின் புகைப்படங்களே செய்திகளின் உயிர்நாடி.
படையினரின் நடவடிக்கையால் ஒரு பத்திரிகையின் ஆசிரியர் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட நேரிட்டுள்ளது.
சமூக பொறுப்புள்ள அரசியல் கட்சி எனும் வகையில் ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் இச் செயலை வன்மையாக கண்டிப்பதுடன் தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்வும் கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது.