உதயநிதியுடன் இணைந்து நடிக்கும் பிரபு

உதயநிதி நடிப்பில் தற்போது வெளிவர உள்ள படம் ‘நண்பேன்டா’. இப்படத்தை அடுத்து எமி ஜாக்சனுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார் உதயநிதி. அதன்பின்னர் அஹமத் இயக்கவிருக்கும் ‘இதயம் முரளி’ படத்திலும் நடிக்கவுள்ளார். அஹமத் ஏற்கனவே ‘என்றென்றும் புன்னகை’ படத்தை இயக்கியுள்ளார்.

pirabu-uthayanethy

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரிக்கும் ‘இதயம் முரளி’ படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கவுள்ளார். தற்போது இவர்கள் கூட்டணியில் பிரபுவும் இணைந்திருக்கிறார். இப்படத்தில் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் பட்டியலை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளனர்.

அனிருத் இசையமைக்க இருக்கும் இப்படத்திற்கு மதி ஒளிப்பதிவை செய்ய இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கவுள்ளது. முதல் கட்டமாக அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Related Posts