உதடுகளின் அசைவை வைத்து பேசுவதை இனங்காணும் தொழில்நுட்பம் ஒன்றை பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சி.சி.டிவியில் பதிவாகியுள்ளவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை புரிந்து கொள்வதற்கு இந்த தொழில்நுட்பம் பயன்படும். குற்றம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக சண்டையிடுவதற்கு இது உதவும் என இதனை உருவாக்கியுள்ள பிரிட்டனில் உள்ள ஈஸ்ட் ஆங்க்லியா பல்கலைக்கழகத்தின் கணிணி விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனாலும் இது பிரபலங்களின் கதைகளை தேடி வெளியிடும் ஊடகவியலாளர்களாலும் கூட பயன்படுத்தப்படலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். மனித உதடுகளின் அசைவை கொண்டு அவர்கள் பேசுவதை கண்டுபிடிப்பவர்கள் ஆங்கிலத்தில் P மற்றும் B ஆகிய எழுத்துக்கள் குறிக்கும் சத்தங்களை வேறுபடுத்துவதில் கடுமையான இடர்களை எதிர்கொண்டுவந்தனர்.
ஆனால் இந்த புதிய தொழில்நுட்பம் அந்த சவால்களை இலகுவாக கையாள வல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது.