உண்மை சம்பவத்தை இயக்குகிறார் சுதா

இறுதிச்சுற்று படத்தின் மூலம் புகழ் வெளிச்சத்துக்கு வந்தவர் சுதா கொங்கரா. தற்போது தெலுங்கில் இறுதிசுற்றான குருவையும் முடித்து விட்டார். தற்போது அடுத்த தமிழ் படத்திற்கான வேலைகளை துவங்கி உள்ளார். அடுத்து சுதா இயக்கப்போகும் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட திகில் படம். இதில் விஜய்சேதுபதி நடிக்கலாம் என்று தெரிகிறது.

இதுபற்றி சுதா கொங்கரா கூறியதாவது:

அடுத்த படம் இதுதான், இப்படித்தான் என்று நான் திட்டமிடுவதில்லை. திடீரென்று ஒரு விஷயம் மனதை பாதிக்கும் அதைநோக்கி எனது அடுத்த படம் நகரும். வடநாட்டு கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் தன் குத்துச்சண்டை வேதனை பற்றி அளித்த பேட்டியை படித்த பிறகுதான் இறுதிச்சுற்று படத்தை இயக்கினேன். அதற்கு முன் குத்துச்சண்டை பற்றி ஒரு படம் இயக்குவோம் என்று நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை.

இப்போது சமீபத்தில் பத்திரிக்கையில் வந்த ஒரு செய்தி என் மனதை மிகவும் பாதித்தது. அந்த சம்பவத்தை நோக்கி அடுத்த படத்தை நகர்த்தியிருக்கிறேன். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திகில் படமாக அதனை உருவாக்கி வருகிறேன். தற்போது ஸ்கிரிப்ட் உருவாக்கத்தில் இருக்கிறேன். மற்றபடி நடிகர், நடிகைகள் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்கிறார் சுதா.

Related Posts