உண்மை சம்பவத்திற்காக போலீஸ் பயிற்சி எடுக்கும் கார்த்தி!

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் ஹிடாரி நடிப்பில் உருவாகி வரும் ‘காற்று வெளியிடை’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.

மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்து வரும் இப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இப்படத்தைத் தொடர்ந்து, `சதுரங்க வேட்டை’ இயக்குநர் வினோத் இயக்கத்தில் `தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார். உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட உள்ள இப்படத்தில், கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

‘மாயா’ படத்தின் ஒளிப்பதிவாளர் சத்யா இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். ‘சிறுத்தை’ படத்தைத் தொடர்ந்து இப்படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ள கார்த்தி இப்படத்திற்காக காவல்துறை சிறப்பு பயிற்சி எடுத்து வருகிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 17ம் தேதி துவங்க உள்ளது.

Related Posts