உண்மையில் மஹிந்தவுக்கு நடந்தது என்ன?

மாத்தறை – அகுரஸ்ஸ பிரதேசத்தில் பேரணி ஒன்றின் போது, முன்னாள் ஜனாதிபதி மக்களிடையே சென்று கொண்டிருந்த வேளை, அவரைப் பிடித்து இழுத்த சம்பவத்தை பயன்படுத்தி அரசாங்கம் அரசியல் இலாபம் தேட முற்படுவதாக, மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக இணைப்பாளர் ரோஹான் வெலிவிட தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தவறான விளக்கம் வழங்கப்படுவதால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறமுடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேரணியில் பாரிய கூட்டம் கலந்து கொண்டதாகவும் மஹிந்த ராஜபக்ஷ வழமைபோல் மக்களுக்கு இடையில் செல்லும் வேளை, எதிரில் வருபவர் எவ்வாறான நபர் என சரியாக அடையாளம் காண்பதில் பாதுகாப்பு பிரிவினருக்கு சிரமம் ஏற்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவத்தின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதரவாளர் ஒருவர் மஹிந்தவை நெருங்க முற்பட்டதாகவும், முடிவில் அவரது (மஹிந்த ராஜபக்ஷ) கையை இறுக்கிப் பிடித்துள்ளதாகவும் வெலிவிட சுட்டிக்காட்டினார்.

மேலும் இதன்போது குறித்த நபர் போதையில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts