சூர்யா நடித்துள்ள ‘சிங்கம்-3’ படத்தின் கதை உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாம்.
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சிங்கம் 3 திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் என படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த படத்திற்காக பிரமோஷன் நிகழ்ச்சிகளில் சூர்யா கலந்து கொண்டு வருகிறார்.இந்த நிகழ்ச்சிகளில் பேசிய சூர்யா,சிங்கம் 3 படம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
சிங்கம் 3 படத்தை மீண்டும் ஒரு காவல்துறை சார்ந்த கதையாக உருவாக்காமல்,ராணுவ வீரர்கள் சார்ந்த கதையாக உருவாக்க முடிவெடுத்திருந்தார்களாம்.
ஆனால் மீண்டும் போலிஸ் கதையாகவே சிங்கம் 3-யை உருவாக்க வேண்டி ஆகிவிட்டதாம்.மேலும் சிங்கம் 3 படத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் நடந்த சில உண்மைச் சம்பவங்களையும்,என்.டி.ஆர் ஆட்சிக்காலத்தில் ஆந்திராவில் நடைபெற்ற சில உண்மைச் சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டு கதை
அமைக்கப்பட்டுள்ளதாம்.
சிங்கம் 3 வழக்கமான சிங்கம் பட ஃபார்முலாவுடன் இருக்கும் எனவும்,துரை சிங்கம் என்ற கதாபாத்திரத்திற்கு சில குணநலன்களை மாற்ற முடியாது எனவும் சூர்யா தெரிவித்துள்ளார்.எனவே சிங்கம் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எந்த அளவிலும் பொய்யாக்காது எனவும் தெரித்துள்ளார்.