தமிழ் அரசியல் கட்சிகளின் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் 9 அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மாணவர்களை, தமிழ் அரசியல் கைதிகளை மற்றும் சரணடைந்த போராளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட வேண்டும், அப்பாவித் தமிழர்கள் கைது செய்யப்படுதல் உடன் நிறுத்தப்பட்டு தமிழர் பகுதியில் இயல்பு நிலை உருவாக்கப்பட வேண்டும்.
அத்துடன், தமிழர் பிரதேசத்தில் இராணுவ பிரசன்னம் நீக்கப்பட வேண்டும், சிவில் நடவடிக்கைகளில் ஆயுதப் படைகளின் தலையீடு நிறுத்தப்பட
வேண்டும், நில ஆக்கிரமிப்புக்கள், அபகரிப்புக்களும் நிறுத்தப்பட வேண்டும், தமிழர் சேதத்தில் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும், தமிழர்களிற்கு கௌரவமான, நீதியான அரசியல் தீர்வு உடன் முன்னெடுக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளே முன்வைக்கப்பட்டுள்ளன.