உண்ணாவிரத போராட்டத்தினைக் கைவிடுமாறு கூட்டமைப்பு அரசியல் கைதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்கட்சித்  தலைவர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற முக்கிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தினைத்  தொடர்ந்தே தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பு மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளது.
இது  தொடர்பில் தமிழ்த்  தேசியக்  கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கருத்துத்  தெரிவிக்கையில்,
‘இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை நீண்ட நேரமாக ஆராயப்பட்டு பின்வரும் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது. நாளை மறுநாள் நாடாளுமன்றத்தில் காணாமல்போனோர் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் சம்பந்தமான தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒத்திவைப்பு பிரேரணை விவாதிக்கப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு விரைவில் முடிவொன்று எட்டப்படுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
எனவே, உண்ணாவிரதம் இருக்கும் கைதிகள் மேற்குறிப்பிட்ட காரணத்தின் அடிப்படையில் தமது உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை கைவிடுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயவாக கேட்டுக் கொள்கின்றது என அவர்  மேலும் தெரிவித்தார்.

Related Posts