உண்ணாவிரதம் இருந்த 20 கைதிகள் வைத்தியசாலையில்..!

அண்மையில் தம்மை விடுவிக்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த அரசியல் கைதிகளில் சுமார் 20 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவர்களின் விடுதலை குறித்து விரைவில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக மனோ கணேசன் மேலும் கூறியுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும் உண்ணாவிரதம் இருக்கும் எவரின் நிலையும் மோசமாக இல்லை என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

Related Posts