உண்ணாவிரதமிருந்த ஆறு அரசியல் கைதிகள் நேற்று மாலை வைத்தியசாலையில் அனுமதி!

தமது விடுதலையை வலியுறு்தி உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் ஆறு பேரின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் சிறைச்சாலை வைத்திய சாலையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமக்கு உரிய பதில் வழங்கப்பட வேண்டும். அதுவரையில் போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனத் தெரிவித்து 14 அரசியல் கைதிகளும் நேற்று போராட்டத்தை தொடர்ந்திருந்தனர்.

கடந்த சனிக்கிழமை முதல் இவர்கள் மருத்துவச் சிகிச்சைகளை முற்றாக புறக்கணித்திருந்தனர். இந்நிலையில் அவர்களில் நான்கு பேர் நேற்று முன்தினம் உடல்நிலை மோசமடைந்த நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து குறித்த நான்கு கைதிகளும் சிறைக்கூடத்திற்கு மாற்றப்பட்டிருந்தனர். இச்சமயத்தில் நேற்று மாலை ஆறு பேர் உடல் நிலை மோசமடைந்த நிலையில் சிறைச்சாலை வைத்திய சாலையில் கட்டாயமாக அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ஏனைய கைதிகளும் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலை யில் காணப்படுவதாகவும் அவர்களுக்கும் சேலையின் உள்ளிட்ட மருத்துவ சிகிக்சைகள் வழங்கப் பட்டு வருவதாகவும் தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Related Posts