இந்தியாவில் 14 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இரோம் ஷர்மிளா என்ற பெண் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த ஐரோம் ஷர்மிலாவை பெண் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
மூக்கு வழியாக குழாய் பொருத்தப்பட்டு அவருக்கு கட்டாயமாக உணவு வழங்கப்படுகிறது.
மலோம் என்ற கிராமத்தில் தனது வீட்டருகே பத்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்தே அவர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
இந்த சம்வத்துக்கு இராணுவமே காரணம் என்று கருதப்படுகிறது.
ஆயுதப் படையினருக்கு சிவில் நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் விசேட சட்டத்தை நீக்க வேண்டும் என்பதே அவரின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
14 ஆண்டுகால உண்ணாவிரதப் போராட்டக்காரரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு