உண்ணாவிரதத்தை கைவிட்டனர் கைதிகள்

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து கடந்த 18 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தமிழ் அரசியல் கைதிகள் 14 பேரும் இன்று வெள்ளிக்கிழமை பகல் உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளனர்.

இந்த தகவலை தமிழ் அரசியல் கைதி உறுதிப்படுத்தினார்.

மிகவிரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் சார்பாக நீதின்றத்தில் இன்று முன்னிலையான சட்டத்தரணி நவாவி உறுதியளித்தார்.

இதற்கமைய தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டதாக தமிழ் அரசியல் கைதி மேலும் கூறினார்.

Related Posts