உண்ணாவிரதக் கைதிகளின் உடல்நலம் பாதிப்பு

தம்மை விடுவிக்குமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளில் மூவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இவர்களில் ஒருவர், கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர் என்றும் மற்ற இருவரும் பல்லேகல தும்பர சிறைச்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்றும் அறியமுடிகின்றது.

தங்களை விடுவிக்குமாறு கோரி இரண்டாவது முறையாக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள தமிழ் அரசியல் கைதிகள், நேற்று செவ்வாய்க்கிழமையுடன் மூன்றாவது நாளாக தமது போராட்டத்தைத் தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts