உணவு விடுதிக்கு அடிக்கல் நட்டுவைத்தார் முதலமைச்சர்!

மன்னார், குஞ்சுக்குளம் தொங்குபாலப் புகுதியில் உணவு விடுதி ஒன்றுக்கான அடிக்கல்லை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இன்று ஞாயிற்றுக்கிழமை நட்டுவைத்தார்.

நானாட்டான் பிரதேச சபை உபதலைவர் றீகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோநோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன், முத்தலிப் பாபா பாறுக், வட மாகாண சபை அமைச்சர்களான ப.சச்தியலிங்கம், பா.டெனீஸ்வரன், உறுப்பினர்களான சிராய்வா, றிவ்கான் பதியுதீன் மற்றும் மன்னார் குருமுதல்வர் விக்டர் சோசை ஆகியோர் கலந்துகொண்டனர்.

வட மாகாண சபை நிதியத்தில் இருந்து 50 லட்சம் ரூபா செலவில் இந்த விடுதி அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை குறித்த இடத்தில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளையும் இன்று முதலமைச்சர் நேரில் பார்வையிட்டார்.

Related Posts