உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட உடுவில் மாணவிகள் மயக்கம் அடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில்அனுமதி!

உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபர் சிரானி மில்ஸை பதவியிலிருந்து நீக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கல்லூரி மாணவிகளினால் கடந்த 3 ஆம் திகதி சனிக்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம், நேற்று செவ்வாய்க்கிழமை (06) முதல், உண்ணாவிரதப் போராட்டமாக மாறியுள்ளது.

uduvil-2

uduvil-1

பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட மாணவிகள் மயக்கம் அடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளானர்.

அதிபரை பாடசாலையில் இருந்து விலகிச் செல்லுமாறு பாடசாலையின் இயக்குநர் சபை (ஆளுநர் சபை) அறிவித்துள்ளது’ என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர். எனினும், தாங்கள் அதிபரை நீக்கியமைக்கான காரணம் குறித்து, பேராயரும், கல்லூரியின் தலைவருமான பேரருட் கலாநிதி டீ.எஸ்.தியாகராஜா, விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

‘உடுவில் மகளிர் கல்லூரி அதிபர் திருமதி சிரானி மில்ஸ், 7 ஆம் திகதியன்று 60 வயதைப் பூர்த்தி செய்யவிருப்பதால், அவர் தனது பிறந்த தினத்துடன் ஓய்வுபெறுவார் எனத் தீர்மானிக்கப்பட்டது.

அதனடிப்படையில் புதிய அதிபர் நியமிக்கப்பட்டார். எனினும் உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்பி மாணவர்களையும், பொதுமக்களையும் குழப்பும் முயற்சிகளில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் அவரது மனைவியும்தான் குறித்த அதிபரை மாற்றம் செய்ய முயற்சிப்பதாக போராட்டத்திலீடுபட்டுள்ள மாணவர்களும் பெற்றோரும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளதுடன் அதிபரை நீக்க தாம் அனுமதிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

Related Posts