உணவுப் பொதியின் விலையும் உயர்கிறது

தேங்காயின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையினால், உணவுப் பொதியொன்றின் விலை 10 ரூபாய் அல்லது 15 ரூபாயினால் ​அதிகரிக்கப்படவுள்ளதாக, இலங்கை உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

அத்துடன், நாட்டில் பல பாகங்களிலும் தற்போது தேங்காய்ப் பற்றாக்குறை பெருமளவு நிலவுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், தேங்காய் ஏற்றுமதியை உடனடி​யாக நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும், அரசாங்க நிறுவனங்களின் ஊழியர்களுக்கு உணவுப் பொதியொன்றினை, 50 ரூபாய்க்கு வழங்க முடியாத நிலைமைக்குத் தாம் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் ​தெரிவித்தார்.

Related Posts