உணவுப்பற்றாக்குறை அடுத்த உலகளாவிய சுகாதார நெருக்கடி!! நிபுணர்கள் எச்சரிக்கை!!

உணவுப்பற்றாக்குறை அடுத்த உலகளாவிய சுகாதார நெருக்கடியாக இருக்கலாம் என முன்னணி உலகளாவிய சுகாதார இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலநக நாடுகள் எதிர்நோக்கி வரும் உணவுப் பற்றாக்குறை உலகிற்கு கொரோனா தொற்றுநோயைப் போன்ற சுகாதார அச்சுறுத்தலைக் குறிக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் போரின் விளைவாக உணவு மற்றும் எரிசக்தியின் விலை உயர்வு, நேரடியாகவும் மறைமுகமாகவும் பல இலட்சக்கணக்கானவர்களைக் கொல்லக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

உணவுத் தட்டுப்பாடு இரண்டு வழிகளில் மக்களை பாதிப்புக்கும். ஒன்று, மக்கள் உண்மையில் பட்டினியால் இறக்கும் சோகம். இரண்டாவது, பெரும்பாலும் மிகப் பெரிய எண்ணிக்கையிலான மக்கள் மோசமான ஊட்டச்சத்துடன் இருக்கிறார்கள். இந்த ஊட்டச்சத்து குறைபாடு, அவர்களை ஏற்கனவே இருக்கும் நோய்களால் மேலும் பாதிப்புக்குள்ளாக்குகிறது.

சில புதிய நோய்க்கிருமிகள் தனித்துவமான புதிய அறிகுறிகளுடன் தோன்றுவது போல் உணவுப்பற்றாக்குறை நன்கு வரையறுக்கப்படவில்லை. ஆனால் இது மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம். உணவுப் பற்றாக்குறையின் பின்விளைவுகளுக்குத் தயாராக செயல்படும் வகையில் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்த முதலீடு தேவை என்றும் தெரிவித்துள்ளார்.

Related Posts