உணர்வுபூர்வமான நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று தமிழ் மக்களால் உணர்வுபூர்வமான நடத்தப்பட்டது.

பிரதான நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பெரும் எண்ணிக்கையான மக்கள் பங்களிப்புடன் நடைபெற்றது.

இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மக்களும் சுடர் ஏற்றி அஞ்சலித்தனர்.

தமிழ் மக்கள் தாயகப் பகுதியான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்றது.

புலம்பெயர் தமிழர்களும், புலம்பெயர்நாடுகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை உணர்வுபூர்வமான முன்னெடுத்தனர்.

அதேவேளை, இன்று காலை கொழும்பு, காலிமுகத் திடலிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தப்பட்டது.

Related Posts