உணர்வுபூர்வமாக நடந்த வாழ்வுரிமைப்போராட்டம்! காவல்துறை அடாவடி!

அரசின் திட்டமிட்ட நில அபகரிப்பினை எதிர்த்தும் மக்களை முழுமையாக மீள்குடியேற்றம் செய்யக் கோரியும் வலி. வடக்கில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் காவற்றுறையினரால் தடுக்கப்பட்ட போதிலும் இறுதியில் குறிப்பிட்ட அளவு மக்கள் தெல்லிப்பளை பிரதேச செயலாளரிடம் சென்று மகஜர் கையளித்தனர்.வலி. வடக்குப் பிரதேச சபைத் தலைவர் சோ.சுகிர்தன் தலைமையில் இடம் பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் இருநூற்றைம்பது பேர் வரையான மக்கள் கலந்து கொண்டனர்.

காலை 10 மணியளவில் துர்க்கையம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமான போராட்டம், பிரதான வீதியை அடைந்தபோது பெருந்தொகையான பொலிஸார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டிருந்தார்கள். கலகம் அடக்கும் பொலிஸார் பெருமளவுக்கு ஆயுதபாணிகளாகக் குவிக்கப்பட்டிருந்தார்கள். குண்டாந்தடிகளும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.பிரதேச செயலரிடம் மகஜர் கையளிக்கச் சென்ற மக்களைத் தடுத்த காவற்றுறையினர் ஆலய வாசலில் மறித்து மேலும் செல்லவிடாது தடுத்தனர்.

இதனையடுத்து, ஆப்பாட்டக்காரர்களுக்கும் காவற்றுறையினருக்கும் இடையே முறுகல் ஏற்பட்டது. அதனையடுத்து, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவும் காங்கேசன்துறை காவற்றுறை அத்தியட்சகரும் இணக்கப்பாட்டுக்கு வந்ததன் அடிப்படையில் மக்கள் அப்படியே வீதியில் அமர்ந்திருக்க, மாவை சேனாதிராசா, கஜேந்திரன், சிவாஜிலிங்கம், மற்றும் பிரதேச சபை தலைவர் சுகிர்தன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் 5 பேர் சென்று பிரதேச செயலகத்தில் மக்களின் மகஜரை கையளித்தனர். இதன் பின்னர் மக்களுடன் பேசிவிட்டு, பின்னர் பொலிஸாரின் செயற்பாட்டிற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஊர்வலமாகச் சென்று மகஜர் சமர்ப்பிப்பதை பொலிஸார் தடுக்க முடியாது என மாவை கடுமையாக வாதிட்டபோது சீற்றமடைந்த பொலிஸார் கடுமையான வார்த்தைகளால் மாவையை திட்டித் தீர்த்ததாக அருகில் நின்றவர்கள் தெரிவித்தனர்.உதவிப் பிரதேச செயலாளர் கே.பிரபாகரமூர்த்தியிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. அத்துடன் மகஜரின் ஒரு பிரதி மாவை சேனாதிராசாவிடமும் கையளிக்கப்பட்டது.

இந்த ஆர்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினாகளான சிவாஜிலிங்கம், கஜேந்திரன், மற்றும் சீ.வி.கே சிவஞானம் என்.வித்தியாதரன், பிரதேச சபைகளின் தலைவாகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட வலி. வடக்குப் பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டம் செய்து திரும்பிய மக்கள் மீது தாக்குதல்;

வீடு திரும்பிக் கொண்டிருந்த மக்கள் மீது புன்னாலைக் கட்டுவன் பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருக்கின்றனர்.மயிலிட்டிப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் பருத்தித்துறை நோக்கி பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்துள்ளனர்.இந்நிலையில், புன்னாலைக்கட்டுவன் பகுதியில் 3 மோட்டார் சைக்கிள்களில் வழிமறித்த நபர்கள், பேருந்தின் மீது கல்லெறிந்துள்ளனர்.

எனினும் சாரதி பேருந்தை நிறுத்தாமல் தொடர்ந்தும் பயணித்திருந்த நிலையில், பேருந்தின் மீது கழிவு ஓயிலை ஊற்றியுள்ளதுடன், இனிமேல் போராட்டம் என்று எதற்கும் வந்தால் இதைவிடவும் மோசமாக நடக்கும் என எச்சரித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இதேவேளை அவர்கள் ஊற்றிய ஓயிலினால், பேருந்திலிருந்து பெண்கள், முதியவர்கள் உட்பட அனைவரும் ஓயிலில் நனைந்துள்ளதுடன், அவர்களது ஆடைகளும் முற்றாக கறைப்பட்டுக் கொண்டன. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா வந்திருந்தார்.

அவர்களிடம் மக்கள் நடந்து சம்பவத்தை தெரிவித்ததுடன், தமக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்தித் தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.இதனையடுத்து சம்பவ இடத்திலிருந்து மக்களை அழைத்துக் கொண்டு பருத்தித்துறை வரை சென்று பாதுகாப்பாக விட்டுவிட்டு அவர் திரும்பியுள்ளார்.

நிலங்களை மீட்டு அரசியல் தீர்வைக் காண வெகுவிரைவில் மாநாடு! மாவை ௭ம்.பி. அறிவிப்பு

அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்பதற்கும் நிரந்தர அரசியல் தீர்வைக் காண்பதற்கும் வெகுவிரைவில் மாநாடு ஒன்று நடத்தப்படும். ஐ.நா.வினுடைய மனித உரிமை பேரவைக்கும் அறிவித்தல் கொடுப்போம் ௭ன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். இம் மாநாட்டிற்கு ௭ங்களுடன் இணைந்துள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைப்பதுடன் அதற்கு அப்பால் சென்று ஜனநாயக ரீதியாக போராடுகின்ற கட்சிகளையும் இணைத்துக் கொள்வோம். எனவும் அவர் தெரிவித்தார்.தெல்லிப்பழையில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் மக்களை கலந்து கொள்ள வேண்டாம் ௭ன்று அரசினுடைய கையாட்கள் தடுத்துள்ளமையை நாம் அறிந்துள்ளோம்.இதனை செய்பவர்கள் செய்யட்டும். நாங்கள் அனைவரும் திடசங்கற்பத்துடன் இருப்போம்.

௭ங்கள் மத்தியில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்புக்கள், அச்சுறுத்தல்கள், தடைகள் குறித்து சர்வதேச சமூகம் உட்பட அனைவருக்கும் அறிவித்தல் கொடுப்போம். ஊர் ஊராகச் சென்று பிரசாரம் செய்வோம். அரசுக்கும் அறிவித்தல் கொடுப்போம். ஐ.நாவுக்குச் செல்வோம். ஐ.நா. மனித உரிமை ஆணையத்திற்கு அறிவித்தல் கொடுக்கப் போகின்றோம்.நாம் அஹிம்சை வழியில், ஜனநாயக வழியில் போராட்டம் நடத்துவோம். இன்றுடன் ௭மது போராட்டம் முடிந்துவிடாது.

பொலிஸாரும் இராணுவமும் ௭ம்மைக் கட்டுப்பத்துவது நியாயம் இல்லை. உச்ச நீதிமன்றமும் உலகமும் ௭ங்களுக்கு பலமாக இருக்கின்றன.௭ங்களுடைய இலட்சியம் ௭ங்களுடைய வீட்டுக்கு ௭ங்களுடைய மண்ணுக்கு நாங்கள் போக வேண்டும். ௭ங்கள் மண்ணை ஆக்கிரமித்துள்ள இராணுவம் இடத்தை விட்டு வெளியேறவேண்டும். அதுதான் ௭ங்களுடைய அடிப்படை நாதமாக இருக்கிறது. இதற்காக நாங்கள் ௭ல்லோரும் போராடுவோம்.

சாத்வீக ரீதியாக போராடுவோம். ௭வ்வித வன்முறைக்கும் நாங்கள் இடமளிக்கமாட்டோம். இந்த சந்தர்ப்பத்தில் நாம் இங்கு கூடியிருப்பது ஓர் உந்து சக்தியாக இருக்கிறது.நேற்று திங்கட்கிழமை போராட்டத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆரம்பித்தது. இதற்காக நாம் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தோம். ஆனால் நீதிமன்றமூடாக பொலிஸார் தடை உத்தரவைப் பெற்றுள்ளார்கள்.

இன்று ௭மது போராட்டத்தின்போது மகஜர் வழங்க அனுமதி மறுத்திருந்தால் இவ்விடத்தில் உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம் செய்திருப்போம். இது ஆரம்பமான நிகழ்ச்சி இப்போது அரசுக்கு ஒருமாத கால அவகாசம் கொடுத்துள்ளோம். இதற்குள் ஓர் முடிவு வழங்கவேண்டும்.

௭ங்களுடைய மக்கள் ஒவ்வொருவரும் சொந்த இடத்தில் குடியேறவும் ௭மது நிலத்தில் இருந்து இராணுவம் வெளியேறவும் மக்களை சொந்த இடத்தில் குடியேற்றுமாறும் அரசுக்கு தெரிவித்துள்ளோம்.மேலும் பாராளுமன்றத்தில் இதற்கான பிரேரணை சமர்ப்பிக்கவுள்ளோம். கடந்த முறையும் இது தொடர்பாக விவாதித்துள்ளோம்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைத் தவிர ஏனைய தென் பகுதி அமைச்சர்கள், இதனைப் பரிசீலிப்பதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஆனபடியால் யார் இதற்கு தடையாக இருக்கிறார்கள் ௭ன்பது ௭ல்லோருக்கும் தெரியும்.சிலர் தாங்கள்தான் ௭ல்லாம் செய்ய வேண்டும் ௭ன்று நினைக்கிறார்கள். அரசாங்கத்தின் பெயரை பாவித்துத் தான் அரசியல் செய்கிறார்கள். நாங்கள் போராடிக் கொண்டு இருக்கிறோம். இவர்கள் அரசாங்கத்துடன் வாழ்ந்து கொண்டு பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அனுமதிக்கக் கூடாது.

இடம்பெயர்ந்த மக்களை யாரும் கைவிடவில்லை. இன்றுடன் மட்டும் ௭மது போராட்டம் நின்று விடாது தொடர்ந்தும் போராடுவோம். புலம்பெயர்ந்து வாழும் மக்களும் ௭மது உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள் ௭னத் தெரிவித்தார்.

Related Posts