உடல் பருமனுக்கும், புற்றுநோய்க்கும் நெருங்கியத் தொடர்பு : எச்சரிக்கும் ஆராய்ச்சியாளார்கள்

உடல் பருமன் மற்றும் புற்றுநோய்க்கு இடையே ஒரு வலுவான தொடர்பு இருப்பதை பிரிட்டன் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உடல் பருமனாக இருப்பதால் வயிறு, குடல், கல்லீரல், மார்பகம் மற்றும் கர்பப்பை உள்பட பல உறுப்புகளில் பதினோரு வகையான புற்றுநோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரித்து காணப்படுவதாக இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

ஆரோக்கியமான எடையை கடைபிடிப்பதன் மூலம் ஒருவர் புற்றுநோய் அபாயத்தை குறைக்க முடியும் என்று லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

உலகளவில் சுமார் 40 சதவிகித வயது வந்தவர்கள் அளவுக்கு அதிகமான எடையில் இருப்பதாக உலக சுகாதார ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.

அந்த எண்ணிக்கையில், 13 சதவிகிதத்தினர் ஆபத்தான உடல் பருமனைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts