சிறைச்சாலைகளில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளில் உடல்நிலை அசாதாரண நிலைக்கு ஆளான எவரும் சிறைச்சாலைக்குள் இல்லை. அனுராதபுரம் சிறைச்சாலையில் ஒரு கைதிக்கு சிறைச்சாலை வைத்தியசாலையில் சேலைன் செலுத்தினோம் என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹண புஷ்பகுமார தெரிவித்தார்.
உண்ணாவிரதத்தில் ஈடுபடும் அரசியல் கைதிகளின் நிலைவரம் தொடர்பாக கேட்போதே ஆணையாளர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
சிறைச்சாலைகளில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளில் உடல் நிலை அசாதாரண நிலைக்கு ஆளான எவரும் சிறைச்சாலைக்குள் இல்லை. அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்த ஒரு கைதிக்கு இன்று (நேற்று) சிறைச்சாலை வைத்தியசாலையில் சேலைன் ஏற்றினோம்.
அத்துடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு உண்ணாவிரதம் இருந்த கைதிகளில் 8 பேரின் உடல் ஆரோக்கிய நிலை பூரணத்துவம் இல்லாத நிலையில் அவர்களை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதித்து சேலைன் ஏற்றினோம்.
சிறைச்சாலைகளில் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளின் உடல் நிலையை சிறைச்சாலைகளில் இருக்கும் வைத்தியர்கள் நாளாந்தம் பல தடவைகள் பரிசோதித்து பார்க்கின்றனர். தற்செயலாக அவர்களின் எவருக்கேனும் உடல் நிலை பாதிப்படைந்தால் அவர்களை உடனடியாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதித்து தேவையான சிகிச்சைகளை பெற்றுக்கொடுப்போம்.
சிறைச்சாலைகளில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளில் எவரேனும் இதுவரை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படவில்லை. அவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கும் அளவுக்கு அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட் டவில்லை என்றார்.