உடற்பருமனை ஊனமாகக் கருதக் கோரும் வழக்கு

பருமனான உடலை ஒரு ஊனமாக கருதுமாறு முதலாளிமாரை வலியுறுத்துவது குறித்த ஒரு சோதனை வழக்கை ஐரோப்பிய நீதிமன்றம் கவனத்துக்கு எடுத்துள்ளது.
obesity_nocredit

அளவுக்கு அதிகமாக பருமனாக இருந்ததற்காக தான் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக கர்ஸ்டென் கல்டொவ்ட் என்னும் டென்மார்க் நாட்டு குழந்தை பராமரிப்பாளர் கூறியுள்ளார்.

அவர் 160 கிலோகிராம் எடையுடையவர். ஆனால், தனது பணிக்கு தனது எடை என்றும் தடையாக இருந்ததில்லை என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

முதலாளிமார் உடற்பருமன் கொண்ட பணியாளர்களுக்கு உதவ வேண்டும் என்றும், அவர்களை பாரபட்சமாக நடத்தக் கூடாது என்றும் அவரது சட்டத்தரணி கூறுகிறார்.
அவர் இந்த வழக்கில் வென்றால், ஐரோப்பாவெங்கிலும், உடற்பருமன் கொண்டவர்களை அனுசரிப்பதற்காக முதலாளிமார் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை செலவிட நேரிடும் என்று சட்டத்தரணிகள் கூறுகிறார்கள்.

Related Posts