உடற்பயிற்சியில் ஈடுபடவேண்டாமென எச்சரிக்கை!

தற்போது நாட்டில் வெப்பநிலை அதிகரித்துள்ளதால் உடற்பயிற்சியில் ஈடுபடவேண்டாம் எனவும் இக்காலநிலையானது இன்னு சில நாட்களுக்கு நீடிக்கும் எனவும் காலநிலை மத்திய ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பகல் பொழுதுகளில் நீங்கள் கட்டாயம் விளையாட வேண்டும் என எண்ணினால் அதற்கு வெப்பதிலிருந்து பாதுகாப்புத் தேவை என மருத்துவ அதிகாரி லால் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த வெப்பமானது குழந்தைகளின் இதயம் மற்றும் மூளையைப் பாதிக்கின்றது எனவும், இதனால் குழந்தைகளின் உடலில் நீர்ச்சத்து அற்றுப் போகும் நிலை தோன்றும் எனவும் குழந்தைகளுக்கான மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரோ தெரிவித்துள்ளார்.

யாராயிருந்தாலும் நீண்டநேரமாக வெயிலில் நிற்கவேண்டாம் எனவும், அனைவரையும் 15 நிமிடத்திற்கு ஒரு தடவை நீரினைப் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் மழைவீழ்ச்சி குறைந்ததன் காரணத்தினாலேயே வெப்பநிலை அதிகரித்துள்ளதாகவும் இன்னும் ஒரு மாதத்திற்குள் எதிர்பார்த்தளவு மழை பெயக்கூடும் எனவும் காலநிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இலங்கையில் அதிகமான வெப்பநிலை வவுனியாவில் 36.6 பாகை செல்சியஸ் எனப் பதிவாகியிருப்பதாக காலநிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Related Posts