இலங்கையின் ஒட்டுமொத்த மருத்துவத் துறையும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் உடனடியாக முடக்கப்பட்டாலும்கூட, எதிர்வரும் 10 நாட்களில் கொரோனா வைரஸ் பரவும் விதியை மாற்ற முடியாது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
டெல்டா மாறுபாடு எந்த மாகாணங்களில் பரவியது என்பதை அடையாளம் காண வைத்தியர்கள் தற்போது வரிசைப்படுத்தலை அதிகரித்துள்ளனர் என்பதோடு, டெல்டா பிளஸ் குறித்த ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர் என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்டா மாறுபாடு மிகவும் அதிகமாக இருக்கும்போது டெல்டா மாறுபாடு இயற்கையாக உருமாறும்போது டெல்டா பிளஸாக மாற்றமடையுமென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையில் இது இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும், மருத்துவர்கள் விழிப்புடன் நிலைமையை கண்காணித்து வருகின்றனர் என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.