உச்சக்கட்ட போர் பதற்றம் – அணு ஆயுதங்களை மேம்படுத்தும் உக்ரைன்

போர் பதற்றத்திற்கு மத்தியில் உக்ரைன், அணு ஆயுதங்களை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது.

உலகின் மிக அழிவுகரமான ஆயுதத்தை உருவாக்கி பாதுகாப்பை பலப்படுத்தினால்தான், ரஷ்யாவின் படையெடுப்பு எதிர்காலத்திலும் தொடராது என்று உக்ரைன் கருதுகிறது.

லாஃப்பரோவில் உள்ள சர்வதேச வரலாறு மற்றும் சர்வதேச உறவுகள் துறை பேராசிரியர் டாக்டர் பால் மாட்ரெல், இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். அணு ஆயுதக் களஞ்சியத்தை நிறுவுவது ரஷ்யாவின் தாக்குதலைத் தடுக்க ஒரு நல்ல வழி என்று உக்ரைன் நம்புவதாக அவர் கூறுகிறார்.

ரஷ்ய ஜனாதிபதி புடினின் போர் ஆர்வத்தை தடுக்கும் வகையில், உக்ரைன் தனது சொந்த அணு ஆயுதங்களை உருவாக்க முடியும். சரியான அளவிலான ஆயுத பலமே, போரை நிறுத்தும்படி புடினை கட்டாயப்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

லாஃப்பரோவில் உள்ள சர்வதேச வரலாறு மற்றும் சர்வதேச உறவுகள் விரிவுரையாளரான டாக்டர் பால் மாட்ரெல், விளாடிமிர் புடினின் நடவடிக்கைகள் உக்ரைனை தனிமைப்படுத்தவும், அந்நாட்டு இராணுவத்தை பலவீனப்படுத்தவும் மற்றும் நேட்டோ விரிவாக்கத்தை மாற்றவும் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று நம்புகிறார்.

உக்ரேனிய அணு ஆயுதக் களஞ்சியத்தை நிறுவுவது புடினை அந்த இலக்குகளைத் தொடர்வதைத் தடுக்க சிறந்த வழியாகும் என்றும் அவர் உறுதியாக நம்புகிறார்.

Related Posts