கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தால் உசன் கிராமத்தில் நடத்தப்பட்டு வரும் பொது நூலகத்தை நவீன முறையில் தரமுயர்த்தும் நோக்கில் இன்றைய தினம் உசன் கிராம மக்களுக்கு இலவச Internet WiFi சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலகுவாக புத்தகங்களை வாசிக்கக் கூடியதாக “I book” சலுகை வழங்கும் முகமாகவும் சிறுவர்களுக்கு ஆங்கில அறிவை வளர்க்கக் கூடிய வகையில், Ipad /Tablet சேவையும் கடந்த 05.08.2015 அன்று தொடங்கப்பட்டுள்ளது.
இந்த வசதியை பொதுநூலக அங்கத்தவர்கள் இலவசமாக பயன்படுத்த முடியும். ஒரு கிராம மக்களின் முழு ஒத்துழைப்புடன் இவாறான சேவை முதன் முதலில் உசன் மக்களால் தொடங்கப்பட்டுள்ளது.
கோவில்களுக்கு பணங்களைக் அள்ளிக் கொட்டி அதனை இடித்திடித்து கட்டுவதனை விட, மாணவர்களின் கல்வியில் உண்மையான அக்கறை செலுத்தி கிராமங்களில் அவர்களுக்கும் இலவச wifi, tablet போன்ற உயர்தர சாதனங்களை வாங்கிக் கொடுத்து ஏழை மாணவர்களுக்கும் இந்த சேவைகளை கிடைக்கச் செய்த கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தினரின் நல் முயற்சிகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகுக.