உக்ரைன் வெளியிட்ட பரபரப்பு காணொளியினால் பதற்றம்

உக்ரைனின் பக்முட் பகுதியில் உள்ள பதுங்கு குழிகளில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சண்டை தொடர்பான காட்சிகளை உக்ரைனின் 3வது தாக்குதல் படை வெளியிட்டுள்ளது.

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் 16 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இரு நாடுகளையும் சேர்ந்த இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என இலட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

உக்ரைன், தற்போது மேற்கத்திய ஆயுதங்களின் ஆயுத பலத்தினால் தொடர்ந்து முதல் முறையாக பதிலடி தாக்குதலை முன்னெடுத்து வருவதுடன், இந்த பதிலடி தாக்குதலில் இதுவரை 8 நகரங்கள் விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பக்முட் பகுதியில் ரஷ்ய படைகளுக்கும் உக்ரைன் படைகளுக்கும் இடையே நடந்த அகழிப் போர் தாக்குதல் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

Related Posts