உக்ரைன் வீரர்களை சிறைபிடித்துள்ள ரஷ்ய படைகள்!!

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக நடைபெற்று வரும் போர் மூன்று மாதங்களை கடந்துள்ள நிலையில், ரஷ்ய படை வீரர்கள் தொடர்ச்சியாக தாக்குதலை தீவிரப்படுத்தித வருகின்றனர்.

இந்நிலையில், மரியுபோல் உருக்காலையை பாதுகாக்கும் போது ரஷ்ய படைகளிடம் சிக்கிய உக்ரைன் நாட்டின் முக்கிய தளபதிகள் 2 பேர் விசாரணைக்காக ரஷ்யா அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மரியுபோல் உருக்காலையில் பதுங்கி தாக்குதல் நிகழ்த்தி வந்த அசோவ் படைப்பிரிவை சேர்ந்த 1,000 க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்களை ரஷ்ய படைகள் சிறை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு சிறைபிடிக்கப்பட்டுள்ள வீரர்கள் விசாரணைக்காக ரஷ்யா அழைத்து செல்லப்பட்டுள்ளதால் அவர்களின் எதிர்காலம் குறித்து உக்ரைன் அச்சம் தெரிவித்துள்ளது.

Related Posts