உக்ரைனுடனான ரஷ்ய போரை நிறுத்துவதற்காக புடினுடன் பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமில்லை என்று ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Annalena Baerbock தெரிவித்துள்ளார்.
உக்ரைனுடனான ரஷ்ய போரை நிறுத்துவதற்காக பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஜேர்மன் வெளியுறவு அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதற்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,“பேச்சுவார்த்தைக்கு அடிப்படையே இல்லை. பேச்சுவார்த்தை நடத்த விருப்பம்தான். ஆனால் தற்போதுள்ள சூழல் நம் விருப்பத்தை குறித்ததல்ல என்றும், இது நிஜத்தை எதிர்கொள்வதற்கான தருணம் என்றும் கூறியுள்ளார்.
போர் முடிவுக்கு வருவது, உக்ரைன் தனது நிலப்பரப்பையும் அமைதியையும் மீட்டுக்கொண்டுவருவதில்தான் உள்ளது.
இந்த ரஷ்ய போர் முடிவுக்கு வந்து, ரஷ்ய வீரர்கள் உக்ரைனை விட்டு வெளியேறி, இரவுகளில் ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் குண்டுகள் மூலம் உக்ரைன் மீது தினமும் தாக்குதல் நடத்துவது நின்றால் மட்டுமே அது சாத்தியம்.”என கூறியுள்ளார்.