உக்ரைன் மீது தொடர் தாக்குதல் நடத்திய ரஷ்யா: வெடித்து சிதறிய ஆயுத கிடங்கு

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினின் திட்டப்படி ரஷ்யா தொடர்ந்து நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஆயுத கிடங்கு வெடித்து சிதறி 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போரில், ரஷ்யா உக்ரைன் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றது.

இந்நிலையில் உக்ரைனின் முக்கிய நகரான க்மெல்னிட்ஸ்கியில் உள்ள ஆயுத கிடங்கை குறி வைத்து ரஷ்யா தொடர்ந்து 21 ட்ரோன்களை அனுப்பியுள்ளது.

மே 12 ஆம் திகதி அதிகாலை 3 மணிக்கு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், ஆயுத கிடங்கு வெடித்து மாபெரும் தீ பந்து கிளம்பியுள்ளதுடன் 30 பேருக்கும் மேல் படுகாயமடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து ட்ரோன் தாக்குதலால் ஏற்பட்ட வெடிப்பில், அருகிலிருந்த கட்டிடங்கள் பெரிதும் சேதமடைந்துள்ளன.

மேலும் ரஷ்யாவின் 17 ட்ரோன்களை உக்ரைன் இராணுவம் சுட்டு வீழ்த்தியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய இராணுவம் வேறு வேறு திசைகளிலிருந்து தாக்குதல் நடத்தியதாகவும், அதனால் உக்ரைன் இராணுவத்தால் ட்ரோன்களை சுட்டு வீழ்த்த முடியவில்லை எனவும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Posts