உக்ரைன் மீதான போர் தந்திரோபாயங்களில் மாற்றம்: ரஷ்யாவின் பயங்கர திட்டம் அம்பலம்

உக்ரைன் மீதான ரஷ்ய போர் ஓராண்டை கடந்து இன்று 433 ஆவது நாளாக நீடித்து வரும் நிலையில் உக்ரைன் மீதான ஏவுகணை தாக்குதல் தந்திரோபாயங்களை ரஷ்யா மாற்றி உள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் ஆலோசகர் மைக்கைலோ போடோலியாக் இதனை தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா சமீபத்தில் ஏவிய 18 ஏவுகணைகளில் 15-ஐ உக்ரைனிய வான் பாதுகாப்பு அமைப்பு தடுத்து நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவின் போர் தந்திரோபாயங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக உக்ரைனிய செய்து நிறுவனமான RBC உக்ரைன் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை,ரஷ்யா ஏவுகணைகள் மூலம் உக்ரைனிய சிவிலியன் அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் குடியிருப்புகள் உள்ள பகுதிகளில் நேரடியாக தாக்குதல் நடத்துவதாக தெரிவித்துள்ளது.

அந்த வகையில் தற்போது ரஷ்ய படைகள் இப்போது உக்ரைனிய சிவிலியன் கட்டமைப்புகளை குறிவைத்து வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இத்தகைய தாக்குதலில் ஏற்படும் பொதுமக்களின் மரணங்களை கொண்டு சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான மேற்கு நாடுகளின் அழைப்புகளை அதிகரிக்க முடியும் என்றும் ரஷ்யா நம்புவதாக தெரிவித்துள்ளார்.

Related Posts