மாஸ்கோ மீது உக்ரைன் ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்தி பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியிருப்பதாக ரஷ்யத் தற்காப்பு அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் இரண்டு கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும், ரஷ்ய தற்காப்பு அமைச்சின் கட்டடங்களிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் சிதைவுகள் காணப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரண்டு ஆளில்லான வானூர்திகள் மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யாவின் உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணியளவில் இரண்டு குடியிருப்பற்ற கட்டடங்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எனினும் இந்த தாக்குதலில் யாருக்கும் எவ்வித மோசமான பாதிப்புகளோ காயங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் தென் துறைமுகமான ஓடெசாவில் ரஷ்யா கடந்த ஒரு வாரத்திற்குத் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதை அடுத்து, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.