உக்ரைனின் கார்கிவ் நகரம் ரஷ்ய ட்ரோன் படைகளால் சுற்றிவளைத்து தாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது ரஷ்யாவின் பெல்கோரோட் நகரம் மீது உக்ரைன் தொடுத்த கடுமையான தாக்குதலில் பலி எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளதுடன் 108 பேர் காயங்களுடன் தப்பியதாகவும் 37 தொகுப்பு குடியிருப்புகளும் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுகிறது.
அத்துடன் குடியிருப்பு வளாகங்கள், உணவகங்கள் மற்றும் வைத்தியசாலைகள் மீதும் ரஷ்யா ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளதுடன் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளையும் ரஷ்யா இலக்கு வைத்துள்ளதாக உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் Lesia Vasylenko குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் தங்களுக்கு ஆயுதம் அளிப்பவர்கள் இந்த போர் முடிவுக்கு வரும் வரையில் ஆயுத உதவிகள் வழங்குவோம் என்று உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே பெல்கோரோட் மீதான தாக்குதலுக்கு தாங்கள் பழிவாங்கியுள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 200க்கும் மேற்பட்ட உக்ரைன் போர் கைதிகளுக்கு ரஷ்யா சிறைத்தண்டனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.