உக்ரைன் நகரங்களை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: நூற்றுக்கு மேற்பட்டோர் படுகாயம்!!

உக்ரைன் நகரங்களை குறிவைத்து ரஷ்யா நடத்திய கின்சால் ஏவுகணை தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 130க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஒலியை விட 10 மடங்கு வேகத்துடன் பயணிக்கும் இந்த ஏவுகணைகள், உக்ரைனின் வான்பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றிக்கொண்டு கீவ், கார்கீவ் நகரங்களின் மீது வெடித்து சிதறியுள்ளன.

இந்த தாக்குதலில் கட்டடங்கள் சரிந்து விழுந்து நொறுங்கியுள்ளதுடன், இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கு பதிலடியாக ரஷ்யாவின் பெல்கோரட் பகுதி நோக்கி டிரோன் படையை உக்ரைன் அனுப்பியுள்ளது.

இருப்பினும் அதனை ரஷ்ய இராணுவத்தின் வான்பாதுகாப்பு தளவாடங்கள் சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை தாக்குதல் போர் தொடங்கியதிலிருந்து ஒரு தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையாகும் என்று உக்ரைன் விமானப்படை செய்தித்தொடர்பாளர் யூரி இஹ்னாட் கூறியுள்ளார்.

Related Posts