உக்ரைன் தாக்குதலில் பலியான ரஷ்ய படைத்தளபதி

உக்ரைன் படையினர் நடத்திய தாக்குதலில் ரஷ்யாவின் 18ஆவது படைப்பிரிவின் துணைத் தளபதி பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதலில் மாகோமெதலி மகோமெட்ஷானோவ் என்ற துணைத்தளபதியே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைனில் நடந்த போரில் காயமடைந்த இவர் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு கிரிமியாவின் செவாஸ்டோபோலில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலே உயிரிழந்துள்ளார்.

ரஷ்யாவின் வடக்கு கடற்படையின் 61வது பிரிகேட்டின் பொறுப்பாளராக மாகோமெட்ஜானோவ் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

Related Posts