உக்ரைன் கள முனைகளில் மகிந்தவின் முன்னாள் பாதுகாவலர்!

இலங்கையில் 2009ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்த இறுதி யுத்தத்தின் பின்னர் மகிந்த ராஜபக்சவின் மெய்பாதுகாவலராக இருந்த இராணுவ அதிகாரி ஒருவர் தற்போது உக்ரைனுக்கு ஆதரவாக போரிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக மகிந்த ராஜபக்சவின் மெய்பாதுகாவலராக இருந்த லஹிரு காவிந்த அத்துருசிங்க என்பவரே உக்ரைனுக்கு ஆதரவாக போரிடுவதாக கூறப்படுகிறது.

உக்ரைன் படையில் வெளிநாட்டினரை பிரதிநிதித்துவப்படுத்தும் 15 பேர் கொண்ட குழுவின் தலைவராக அவர் செயற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொழும்பில் மூண்ட கோட்டாபாய அரசிற்கு எதிரான போராட்டத்தின் போது அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மெய்பாதுகாவலராக அவர், பணியாற்றியுள்ளார்.

கடந்த எட்டு மாதங்களாக எந்தவொரு பாதிப்புகளும் இன்றி போர்களத்தில் செயற்பட்டு வருவதாகவும் தான் ஒருபோதும் கூலிப்படையாக இணையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எனது முழு விருப்பத்தின் பேரிலேயே உக்ரைன் இராணுவத்தில் இணைந்துகொண்டேன். எவ்வாறாயினும் இலங்கை இராணுவத்தில் இருந்து நான் அதிகாரப்பூர்வமாக விலகவில்லை” என தெரிவித்துள்ளார்.

Related Posts