உக்ரைன் கண்ணி வெடியில் சிக்கி வெடித்து சிதறிய ரஷ்ய டாங்கிகள்

உக்ரைன் – ரஷ்ய போர் ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் போர் பாக்முட் நகரில் 10 மாதங்களுக்கு மேலாக இருதரப்பினரும் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாக்முட் நகரை ரஷ்ய படைகள் நாலாபுறமும் சூழ்ந்து தாக்குதல் நிகழ்த்திவரும் நிலையில், அங்கிருந்து உக்ரைன் இராணுவம் பின்வாங்கப்போவதில்லை என அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

இவ்வாறான பின்னணியில் உக்ரைன் கண்ணி வெடியில் சிக்கி ரஷ்ய டாங்கிகள் வெடித்து சிதறும் காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் 155வது டேங்க் படைப்பிரிவு உக்ரைனின் வுஹ்லேடர் என்ற நகரை நோக்கிச்சென்ற போது புறநகர் பகுதியில் சிறிய சாலையில் சென்ற டாங்கிகள் அடுத்தடுத்து கண்ணி வெடியில் சிக்கி வெடித்துச் சிதறியுள்ளன.

இதற்கு அனுபவமற்ற வீரர்கள் டாங்கிகளை இயக்குவதே காரணம் என்று கூறப்படும் நிலையில், படையின் மூத்த அதிகாரிகள் வுஹ்லேடர் நகரை நோக்கி செல்வதற்கு மறுப்பதாகவும் கூறப்படுகின்றது.

இதற்கமைய, வுஹ்லேடர் நகரை என்ன விலை கொடுத்தாலும் கைப்பற்ற வேண்டும் என ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு தெரிவித்துள்ளார்.

Related Posts