உக்ரைனை அடித்து நொறுக்கி அடிபணிய வைக்க ரஷ்யா திட்டம்!

உக்ரைன் – ரஷ்ய போர் தீவிரமடைந்துள்ள நிலையில் உக்ரைனை ரஷ்ய இராணுவம் அடிபணிய வைக்கும் என்பதில் ரஷ்ய ஜனாதிபதிக்கு அபார நம்பிக்கை உள்ளதாக அமெரிக்காவின் சி.ஐ.ஏ. இயக்குநர் கூறியுள்ளார்.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய போர் கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி இறுதியில் ஆரம்பமான நிலையில் தற்போது வரை போர் தொடர்ந்தும் நீடித்து வருகின்றது.

இவ்வாறான பின்னணியில் உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கிய மேற்கத்திய நாடுகள் ஆயுத,வாகன ,நிதியுதவிகளை தொடர்ந்தும் வழங்கி வருகின்றது.

இந்த போரினால், இரு தரப்பிலும் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், உக்ரைனின் உள்கட்டமைப்பை இலக்காக கொண்டு ரஷ்யா ஏவுகணை தாக்குதல்களை தொடுத்து வருகின்றது.

இந்நிலையில், போர் தொடர்பில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. அமைப்பின் இயக்குனரான வில்லியம் பர்ன்ஸ் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உக்ரைனை அடித்து நொறுக்கி, தனக்கு அடிபணிய வைப்பதில், ரஷ்ய இராணுவத்தின் திறமை மீது அதிபர் புடின் அபார நம்பிக்கை வைத்திருக்கின்றார்.

உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுத சப்ளை, நிதியுதவி என வழங்கி வரும் ஐரோப்பிய நாடுகளையும் களைப்புற செய்வார். இந்த நிலையிலேயே, அமெரிக்காவுடனான ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் பங்கேற்காமல் ரஷ்யா விலகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அமெரிக்காவுடன் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் அணு ஆயுத பயன்பாட்டில் ரஷ்யாவுக்கு எதிராக கைகோர்த்து உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts