நெதர்லாந்தில் இருந்து F-16 போர் விமானங்களை பெற்றுக்கொள்வதற்காக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டேவை சந்தித்துள்ளார்.
உக்ரைன் இராணுவத்திற்காக நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அதிநவீன போர் விமானம் அமெரிக்காவின் ஒப்புதலுடன் நாட்டை வந்தடைந்துள்ளதாக குறித்த சந்திப்பின்போது ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டவுடன் உக்ரைனுக்கு F -16 விமானங்களை வழங்க தீர்மானித்துள்ளதாக டென்மார்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய அரசாங்க ஒப்புதல் வழங்கியிருந்தன.
இதன் பிரகாரம் இரு நாடுகளும் தற்போது உக்ரைனுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளன.
இதற்கமைய உக்ரைனுக்கு ஆதரவு வழங்க நெதர்லாந்து மற்றும் டென்மார்க் அரசாங்கங்கள் ஒரு கூட்டணியில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உக்ரைன் விமானிகளுக்கான பயிற்சி நடவடிக்கைகள் இம்மாதம் ஆரம்பிக்கப்படும் என டென்மார்க் பாதுகாப்பு அமைச்சர் ஜாகோப் எல்லெமன்-ஜென்சன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வார தொடக்கத்தில் டென்மார்க் மற்றும் நெதர்லாந்து தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அந்தோனி பிளிங்கன் இந்த ஒப்புதலுக்கான விடயங்களை சுட்டிக்காட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.