Ad Widget

உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா! பகிரங்கமாக பைடன் வெளியிட்ட தகவல்

ரஷ்யா- உக்ரைன் போரில் நேட்டோ மீதான உக்ரைனின் ஒற்றுமைத்தன்மை குறைந்துவிடும் என புடின் நினைத்தது தவறானது என பைடன் தெரிவித்துள்ளார்.

லிதுவேனியாவின்- வில்னியஸ் நகரில் இடம்பெற்ற நேட்டோ உச்சிமாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,”போர் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் நேட்டோ மற்றும் உக்ரைனுக்கு இடையிலான உறவு நீங்கி விடும் என ரஷ்யா ஜனாதிபதி புடின் சபதம் பிடித்தார். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.

உக்ரைனுடனான எங்கள் உறுதிமொழிகள் என்றும் பலவீனமடையாது.

உக்ரைனின் தற்காப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக அமெரிக்கா 50 க்கும் மேற்பட்ட நாடுகளின் கூட்டணியை உருவாக்கியுள்ளது.

நியாயமான நிபந்தனைகளின் கீழ் யுத்தம் நிறைவடைய வேண்டும் என்பதே எங்கள் அனைவரினதும் எதிர்ப்பார்பாக இருக்கிறது. இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு என்பன நாடுகளுக்கிடையேயான அமைதியான உறவின் முக்கிய தூண்கள்.

ஒரு நாடு தனது அண்டை நாட்டை பலவந்தமாக கைப்பற்ற அனுமதிக்க முடியாது.

ரஷ்யா உக்ரைனிலிருந்து தனது படைகளை மீள பெற்றுக்கொள்வதன் மூலம் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர முடியும்.”என தெரிவித்துள்ளார்.

Related Posts