உக்ரைனில் தாக்குதலை தொடர வேண்டும் – படைகளுக்கு புடின் உத்தரவு

லிசிசான்ஸ்க் நகரை ரஷ்யா கைப்பற்றியதை அடுத்து, உக்ரைனில் தாக்குதலை தொடர ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது பாதுகாப்பு அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார்.

“முன்னர் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின்படி” தங்கள் நோக்கங்களைத் தொடர மற்ற முனைகளில் உள்ள படைகளுக்கு புடின் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, லுஹான்ஸ்க் பகுதி முழுவதும் இப்போது ரஷ்ய கைகளில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பிராந்தியத்தின் உக்ரைன் ஆளுநர் செர்ஹி ஹைடாய் நகரம் கைவிடப்பட்டதாகக் கூறினார், சிப்பாய்கள் இப்போது புதிய வலுவூட்டப்பட்ட நிலைகளுக்கு நகர்ந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நகரத்தை இழந்து, லுஹான்ஸ்க் கட்டுப்பாட்டை ரஷ்யாவிடம் ஒப்படைப்பது வேதனையானது என அவர் கூறினார்.

ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பதில் தாக்குதல் நடத்த மேற்குலக நாடுகளிடம் இருந்து அதிக ஆயுதங்களுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, “நவீன ஆயுதங்கள் வழங்கல் அதிகரிப்புக்கு நன்றி” உக்ரேனியப் படைகள் லிசிசான்ஸ்க்கை மீட்கத் திரும்பும் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உறுதியளித்துள்ளார்.

ரஷ்யா இப்போது அண்டை நாடான டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள நகரங்கள் மீது குண்டுவீச்சை முடுக்கிவிட்டுள்ளது. டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகள் இணைந்து தொழில்துறை டான்பாஸ் பகுதியை உருவாக்குகின்றன.

லுஹான்ஸ்கைக் கைப்பற்றுவதற்கான பிரச்சாரத்தில் பங்கேற்ற துருப்புக்கள் “ஓய்வெடுக்க வேண்டும் எனவும், அவர்களின் போர் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்று புடின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவிடம் கூறினார்.

“கிழக்குக் குழு மற்றும் மேற்குக் குழு உட்பட பிற இராணுவப் பிரிவுகள், முன்னர் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின்படி தங்கள் பணிகளைச் செய்ய வேண்டும்,” என்று புடின் பணிப்பு விடுத்துள்ளார்.

லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் பெற்றதைப் போன்ற வெற்றியைப் பெறுவார்கள் என்ற நம்பிக்கையை விளாடிமிர் புடின் வெளிப்படுத்தினார். பிப்ரவரி 24 அன்று உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடங்குவதற்கு சற்று முன்பு, லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் அனைத்தையும் சுதந்திர நாடுகளாக புடின் அங்கீகரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts