உக்ரைனிலிருந்து கடத்திச்செல்லப்பட்ட 19 ஆயிரம் குழந்தைகள்! பரபரப்பு தகலை வெளியிட்ட உக்ரைன்

ரஷ்ய படைகளால் உக்ரைனிலிருந்து வலுக்கட்டாயமாக 19 ஆயிரம் குழந்தைகள் அழைத்து செல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலெனா ஜெலன்ஸ்கா பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

நியூயார்க்கில் நடைபெற்றுவரும் ஐ.நா. மாநாட்டில் உரையாற்றிய போதே ஒலெனா ஜெலன்ஸ்கா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எனவே 19 ஆயிரம் குழந்தைகளை மீட்டு வர உதவுமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலெனா ஜெலன்ஸ்கா உலக நாடுகளிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

உக்ரைனிலிருந்து கடத்தி செல்லப்பட்ட குழந்தைகளிடம், பெற்றோரும், உக்ரைன் அரசும் அவர்களை தலைமூழ்கிவிட்டதாக கூறி தாய் நாட்டிற்கு எதிராக அவர்களை ரஷ்ய அதிகாரிகள் மூளை சலவை செய்துவருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

Related Posts