உக்ரைனின் மீது ரஷ்யா திடீர் தாக்குதல்!!

உக்ரைனின் கெர்சன் நகர் மீது ரஷ்யா நடத்திய திடீர் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் பல மாதங்களாக தொடரும் நிலையில், தாக்குதலின் தீவிரம் சற்று குறைந்துள்ளது.

எனினும் இரு நாடுகளும் அவ்வப்போது எதிர் பிராந்தியத்திற்குள் ஏவுகணை ஏவி திடீர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று உக்ரைனின் கெர்சன் நகரில் உள்ள மக்கள் குடியிருப்பு பகுதிகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.

குறித்த திடீர் தாக்குதலில் 72 வயது ஆண் ஒருவருடன் சேர்த்து மற்றொரு பெண் என இருவர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் ரஷ்யாவின் இந்த தாக்குதலில் இதுவரை 3 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றும் சேதமடைந்துள்ளது.

Related Posts