அனைத்து ரஷ்ய மக்களுக்கும் விசா மறுக்கப்பட வேண்டும் என்ற கருத்தை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கவில்லை என்று தெரிவித்துள்ளன.
அனைத்து ரஷ்யர்களுக்கும் விசா மறுக்கப்பட வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy இந்த மாத தொடக்கத்தில் தி வாஷிங்டன் போஸ்ட்டிடம் தெரிவித்திருந்தார்.
“எல்லைகளை மூடுவதே மிக முக்கியமான தடைகளாகும். ஏனெனில் ரஷ்யர்கள் வேறொருவரின் நிலத்தை அபகரிக்கிறார்கள் என Volodymyr Zelenskyy தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், இந்த நடவடிக்கை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் முழுமையாக நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், முக்கியமான அடைக்கலப் பாதைகளைத் திறந்து வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இது குறித்து அமெரிக்க அரசுத் துறையின் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில்,
“ரஷ்யாவின் எதிர்ப்பாளர்கள் அல்லது மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்படக்கூடிய பிறருக்கான அடைக்கலம் மற்றும் பாதுகாப்பிற்கான பாதைகளை அமெரிக்கா மூட விரும்பவில்லை.
“ரஷ்ய அரசாங்கத்தின் நடவடிக்கைகள், உக்ரைனில் அதன் கொள்கைகள் மற்றும் ரஷ்யாவின் மக்களுக்கு இடையே ஒரு கோட்டை வரைவது முக்கியம் என்பதையும் நாங்கள் தெளிவாகக் கூறுகிறோம்.” என தெரிவித்திருந்தார்.
இதனிடையே, அனைத்து ரஷ்யர்களுக்கும் நுழைவதைத் தடுப்பது நல்ல யோசனையல்ல என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜோசப் பொரெல் முன்னதாக இன்று தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.