உக்ரைனின் அதிநவீன இராணுவ ஆயுதங்களை குண்டுவீசி அழித்த ரஷ்யா!

ரஷ்யா – உக்ரைன் இடையே மீண்டும் தீவிரமடைந்த போர் நடவடிக்கையின் போது உக்ரைனில் இராணுவ குடோன்களில் வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு அதிநவீன இராணுவ ஆயுதங்களை குண்டுவீசி அழித்ததாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் உக்ரைனின் எம்.ஐ.8 ஹெலிகாப்டர் மற்றும் பல டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய இராணுவத்தின் செய்தி தொடர்பாளர் கார்கோனசென்கோ தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் நடவடிக்கையின் காரணமாக 6 இடங்களில் உக்ரைன் இராணுவம் பின்வாங்கியுள்ளதாகவும், இதில் உக்ரைன் தரப்பில் அதிகளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அதேவேளை, ரஷ்யாவின் இராணுவ நிலைகளை குறிவைத்து தாக்கிய உக்ரைன், வெடிமருந்து கிடங்கு, எரிபொருள் கிடங்கு உள்ளிட்டவைகளையும் தகர்த்துள்ளதாக கூறியுள்ளது.

Related Posts