உக்ரைனின் சிறப்பு தாக்குதல் நடவடிக்கையில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட கருங்கடல் கடற்படையின் தளபதி விக்டர் சோகோலோ சமீபத்தில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பில் காணொளி இணைப்பு மூலம் இணைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் போர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ரஷ்யாவின் போர் விமானங்கள் தரையிறங்கும் மின்ஸ்க் கப்பல் மீது உக்ரைன் சிறப்பு தாக்குதல் நடத்தியிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கருங்கடல் கடற்படையின் தலைமையகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டதாகவும் உக்ரைன் அறிவித்திருந்தது.
அத்துடன் உக்ரைனின் இந்த சிறப்பு தாக்குதலில் கருங்கடல் கடற்படையின் தளபதி விக்டர் சோகோலோ-வும் கொல்லப்பட்டதாக உக்ரைன் தரப்புகள் தெரிவி்த்திருந்தன.
இந்நிலையில் உக்ரைனின் சிறப்பு தாக்குதலில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட கருங்கடல் கடற்படையின் தளபதி விக்டர் சோகோலோ சமீபத்தில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காணொளி இணைப்பு மூலம் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இதனை தொடர்ந்து ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையின் தளபதி விக்டர் சோகோலோ மரணம் குறித்த குழப்பத்தை தெளிவுபடுத்துவதாக உக்ரைனிய சிறப்பு படை தெரிவித்துள்ளது.